அரியலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரங்கத்திற்கு அனிதாவின் பெயரை சூட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
குழுமூர் கிராமத்தில் பிறந்த அனிதா, கடந்த 2017-ம் ஆண்டு ஆயிரத்து 176 மதிப்பெண்கள் எடுத்தும், நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மருத்துவராக வேண்டும் என்ற அனிதாவின் கனவு பாதியிலேயே நிறைவேறாமல் போனது.
இதையும் படிக்க : ஆஸ்கர் விருது எதிரொலி...’ரகு’ யானையை காண குவியும் வெளிநாட்டினர்!
இந்நிலையில், நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவை பெருமைப்படுத்தும் விதமாக, அரியலூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரங்கத்திற்கு அனிதா நினைவு அரங்கம் என பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.