கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கான வாடகை, குத்தகை கட்டணங்களை சீர் செய்ய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை பெறப்பட்ட பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, கோயில் நிலங்களில் பல்லாண்டு காலமாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனவும், கொரோனா காலத்தில் செலுத்த வேண்டிய வாடகை, குத்தகை தொகையை தள்ளுபடி செய்யக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நாகை மாலி மற்றும் சின்னதுரை ஆகியோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதையும் படிக்க : அண்ணாமலை சொன்னால்...நான் அதற்கு பதில் அளிப்பேன் - ஓபிஎஸ்!
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களை எந்த இடத்திலும் அகற்ற கூடாது என்று முதலமைச்சர் தெரிவித்து இருப்பதால், யாரும் அகற்றப்படவில்லை என்றார்.