அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
Published on
Updated on
1 min read

அரியலூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் 26 ஏக்கர் பரப்பளவில் 347 கோடி ரூபாய் நிதி மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி  கட்டிடப்பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 

இந்நிலையில் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஐந்து தளங்களைக் கொண்ட 700 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். 

இதனையடுத்து பல்வேறு துறைகளின் சார்பில் 2 ஆயிரத்து, 539 பயனாளிகளுக்கு 13 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.  

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com