நவராத்திரி விழா...கொலு பொம்மை விற்பனை கண்காட்சி...!

நவராத்திரி விழா...கொலு பொம்மை விற்பனை கண்காட்சி...!
Published on
Updated on
1 min read

சென்னை கலைவாணர் அரங்கில், தமிழக அரசு சார்பில்  நவராத்திரி விற்பனை கண்காட்சி இன்று தொடங்குகிறது.

கொலு பொம்மை கண்காட்சி:

கொலு பொம்மைகள் நிறைந்த நவராத்திரி விழா வருகிற செப்டம்பர் 26ம் தேதி தொடங்கி அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில் இதற்கு தேவையான கொலு பொம்மைகளை விற்பனை செய்திடும் வகையில் தமிழக அரசு சார்பில் கொலு பொம்மை கண்காட்சி சென்னை கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று தொடங்கி வரும் 18ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன. 

இ-கண்காட்சி:

இதுதவிர இ-கண்காட்சி வாயிலாகவும் விற்பனை நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கிராமப்புற கைவினை கலைஞர்கள் தயாரிக்கும் பழம் பெருமை வாய்ந்த கலைப் பொருட்கள், பாரம்பரிய உணவு வகைகள், புவிசார் குறியீடு பெற்ற தனித்துவம் வாய்ந்த பொருட்கள், இயற்கை வழியில் தயாரித்த பொருட்கள் ஆகியன விற்கப்படவுள்ளன, 

இன்று மாலை தொடக்கம்:

இன்று தொடங்கவுள்ள கண்காட்சியை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாலை 5.30 மணிக்கு அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைக்கிறார்.  

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com