நவீன உதகை உருவாகி 200 ஆண்டுகள் நிறைவுபெற்றதைக் கொண்டாடும் விழா கோலாகலமாக நிறைவடைந்தது.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரியில், 200 ஆண்டுகளுக்கு முன்னதாக அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த ஆங்கிலேயர் ஜான் சல்லீவன், முதன்முறையாக தேயிலை மகசூலை அறிமுகம் செய்தார். ஆங்கிலேயக் காய்கறிகளான உருளை, கேரட் உள்ளிட்டவற்றை உதகையில் அறிமுகம் செய்து, பழங்குடியின மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.
இதையும் படிக்க : பாஜக தமிழரை வேட்பாளராக அறிவித்தால் ஆதரவு - சீமான் பேட்டி!
தொடர்ந்து அவரை கவுரவிக்கும் வகையில், கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடப்பாண்டு ஜூன் வரை, 10 கோடி ரூபாய் ஒதுக்கீட்டின் கீழ் உதகை 200 என்ற விழாவுக்கு எற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வந்த இவ்விழா, பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நிறைவுபெற்றது.
இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன், நீலகிரி எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்று உதகை 200 தொடர்பான புத்தகத்தை வெளியிட்டனர். நிகழ்வையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றோருக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.