பாஜக தமிழரை வேட்பாளராக அறிவித்தால் ஆதரவு - சீமான் பேட்டி!

பாஜக தமிழரை வேட்பாளராக அறிவித்தால் ஆதரவு - சீமான் பேட்டி!

Published on

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழரை வேட்பாளராக அறிவித்தால் ஆதரவளிப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 


தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தி கொண்டு செல்லப்படுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினால், அவர் ஊழல் மூலம் பெற்ற பணத்தை எப்படி பிரித்து கொடுத்தார் என்ற செய்தி வெளியாகும் என்பதால் முதலமைச்சர் பயப்படுகிறார் என விமர்சித்தார். மேலும், பாஜக தமிழர் ஒருவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் நாம் தமிழர் கட்சி ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், விஜய் அரசியலுக்கு வருவதால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்திலேயே அரசியலுக்கு வந்தவர்கள் நாங்கள். அவர் வேற, நான் வேற எங்களுக்குள்ள பந்தம் அண்ணன் தம்பி மட்டும் தான் என பேசினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com