முதலமைச்சர் கருத்துக்கு பதிலளிக்க மறுத்த அமைச்சர் பொன்முடி!!

முதலமைச்சர் கருத்துக்கு பதிலளிக்க மறுத்த அமைச்சர் பொன்முடி!!
Published on
Updated on
1 min read

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன்  கல்வியியல் கல்லூரியில் பி எட் கலந்தாய்வை துவங்கி வைத்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

முதல்முறையாக...:

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக 4000 விரிவுரையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு நியமிக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கௌரவ விரிவுரையாளர்கள் நிலை?:

தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்கள் நிரந்தர விரிவுரையாளர்கள் நியமிக்கப்படும் வரை பணியில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

நேர்முகத் தேர்வில்..:

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும்  விரிவுரையாளர்  தேர்வில் வெற்றி பெறும் நபர்களுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில் நேர்முகத்தேர்வில்  அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வரை மதிப்பெண் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தகுதியில்லாதவர்கள்...:

தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளராக பணியில் உள்ள 5600 நபர்களில் 2000த்திற்கும்  மேற்பட்டவர்ள் விரிவுரையாளர்களுக்கான தகுதி இல்லாமல் இருப்பதாக தெரிவித்த அமைச்சர் இவர்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொண்டால் மட்டுமே பணியில் தொடர முடியும் என்று கூறியுள்ளார்.

எஞ்சியிருக்கும் பணியிடங்கள்:
 
4ஆயிரம் நிரந்தர விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டாலும் எஞ்சியிருக்கும் 1875  காலி விரிவுரையாளர் இடங்களில் கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் பொன்முடி.

பதில் கூற மறுப்பு:

சில அமைச்சர்களின் செயல்பட்டால் தூக்கமிழந்துள்ளதாக முதலமைச்சர் பேசியபோது சிரித்துக்கொண்டிருந்தது ஏன்...? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல மறுத்து கையில் சைகைகாட்டி கோபத்துடன் புறப்பட்டார் அமைச்சர் பொன்முடி.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com