இன்று தமிழ் எங்கே இருக்கிறது..? கேள்வி எழுப்பிய ராமதாஸ்!

இன்று தமிழ் எங்கே இருக்கிறது..? கேள்வி எழுப்பிய ராமதாஸ்!
Published on
Updated on
1 min read

தமிழ் மொழி வேகமாக மரணித்துக் கொண்டு வருவதாகவும் பிற மொழி கலப்பில்லாமல் தமிழை பேசி பழகுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக தாய் மொழி தினத்தை ஒட்டி பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னையிலிருந்து மதுரை வரை 8 நாட்கள் நடைபெறும்  "தமிழை தேடி" விழிப்புணர்வு பரப்புரை பயணத்தின்  தொடக்க நிகழ்ச்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ், இன்று உலக தாய் மொழி நாள்...ஆனால், இன்று தமிழ் எங்கே இருக்கிறது? என கேள்வி எழுப்பியவர், உலக மொழிகளில் தொன்மையான தமிழ் மொழியை நாம் தொலைத்துக் கொண்டிருப்பதாக கூறினார். 

தொடர்ந்து, "விதியே விதியே என் செய்ய நினைத்தாய்; என்னுயிர் தமிழை என் செய்ய நினைத்தாய்” என்ற பாடலை சுட்டி காட்டி பேசிய அவர், தமிழ்நாட்டில் பிற மொழி பேசுபவர்களுக்கு எதிரான இயக்கம் அல்ல என்பதையும் தெளிவுபடுத்தினார். மேலும், பேருந்து ,சிற்றுந்து ,தொடர்வண்டி என்கிற வார்த்தைகள் எல்லாம் அறிமுகபடுத்தியது பாமக தான் என்று குறிப்பிட்டார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com