விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள அன்புஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
விக்கிரபாண்டி அருகே குண்டலப்புலியூரில் செயல்பட்டு வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோர் பராமரிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால், அந்த ஆசிரமத்தில் போதிய இடவசதி இல்லை என்றும், ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் 150 க்கும் மேற்பட்டோரை உரிய முறையில் பராமரிப்பதில்லை என்றும், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, விசாரணை நடைபெற்றது.
பின்னர் இந்த வழக்கானது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, நேற்றைய தினம் இந்த வழக்கு தொடர்பாஅ ஆவணங்களை பெற்றுக்கொண்ட சிபிசிஐடி போலீஸார், இன்று அன்பு ஜோதி ஆசிரமத்தில் தடவியல் நிபுணர்களை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.