கோவில் நிலங்கள் புறம்போக்கு நிலமா? - இந்து அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி!

கோவில்  நிலங்கள் புறம்போக்கு நிலமா? - இந்து அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி!
Published on
Updated on
1 min read

கோவிலுக்கு சொந்தமான குளங்களின் நிலங்கள்,  புறம் போக்கு நிலமா? என்பது குறித்து இந்து அறநிலையத்துறை பதலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

குளம் ஆக்கிரமிப்பு வழக்கு:

தஞ்சை ஆலக்குடி கிராமத்தில் உள்ள  முத்து  மாரியம்மன் கோவிலுக்கு  சொந்தமான குளம்   ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தொடர்பான வழக்கு மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் கேள்வி:

அப்போது, கோயில் தெப்பக்குளங்கள் பொது இடத்தில் இருப்பதால் அரசு புறம்போக்கு நிலம் என கூற முடியுமா? என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கோயிலுக்கு சொந்தமான குளங்களை எவ்வாறு அரசு புறம்போக்கு என வருவாய் துறையினர் வகைப்படுத்த முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

மேலும், இது போன்ற நிலங்களின் விவரங்கள் குறித்து  வருவாய்  மற்றும்  இந்து சமய அறநிலைய துறைகள் பதிலளிக்கவும்  நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com