ஈரோடு கிழக்கு மகுடம் யாருக்கு...? 3 ஆம் சுற்றின் நிலவரம்...

ஈரோடு கிழக்கு மகுடம் யாருக்கு...? 3 ஆம் சுற்றின் நிலவரம்...
Published on
Updated on
1 min read

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவையொட்டி, அத்தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தேர்தலில் திமுக கூட்டணி  சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாதக சார்பில் மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களம் இறங்கினர். அதனைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து, பல்வேறு பாதுகாப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்  நடைபெற்றது. இந்நிலையில் ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்ததைபோன்று, மார்ச் 2 ஆம் தேதியான இன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையானது 15 சுற்றுகள் என்ற அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், முதல் சுற்றில் இருந்தே முன்னிலையில் இருந்து வரும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மூன்று சுற்று முடிவில் 22,756 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக அதிமுக 6,507 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. தொடர்ந்து சுற்றுகள் நடைபெற்று வருவதால், ஈரோடு கிழக்கு மகுடம் யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com