திருவண்ணாமலையில் நடைபெற்ற தொடர் ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான நிஜாமுதீனை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி அதிகாலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. கொள்ளையர்கள் ஏடிஎம் மையத்தில் உள்ள எந்திரங்களை கேஸ் வெல்டிங் மூலம் வெட்டி எடுத்து 72 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கில், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஆரிப், ஆசாத் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிக்க : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தொடக்கம்..!
இதற்கிடையில் ஏற்கனவே, கோலார் பகுதியை சேர்ந்த குதரத் பாஷா, அப்சர் ஆகிய இருவரும் கொள்ளையர்களுக்கு உதவியாக இருந்ததால் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஏடிஎம் கொள்ளைக்கு முக்கிய காரணமாக கருதப்படும் குற்றவாளி நிஜாமுதீனை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், தற்பொழுது சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர். இதன்படி, ஏடிஎம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.