உபரிநீர் அதிகளவு வெளியேற்றப்படுவதால் கரையோர மக்கள் அச்சம்... வெள்ளம் வருமா?

உபரிநீர் அதிகளவு வெளியேற்றப்படுவதால் கரையோர மக்கள் அச்சம்... வெள்ளம் வருமா?
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு அணைகள், ஏரிகள் நிரம்பியதால், உபரி நீர் அதிகளவு வெளியேற்றப்பட்டு வருகிறது. கரையோரத்தில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். 

மேட்டூர் அணை நீர் திறப்பால், கரூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் 40க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.  அங்குள்ள மக்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கோமுகி அணையின் நீர் திறப்பால் கடலூர்  மாவட்டம் விருத்தாலம்  மணிமுத்தா நதியில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில், ஒலி பெருக்கி மூலம், அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், முல்லைப் பெரியாறு அணை, வைகை ஆணை, மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகா நதி ஆகிய 5 அணைகளும் வேகமாக நிரம்பி  முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. இதனால் 5 மாவட்ட விவசாயிகள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி  மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கும்பக்கரை அருவியில் ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து, 6வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து, 13ஆயிரம் கனஅடியாக  அதிகரித்துள்ளது. சாத்தனூர் அணை வேகமாக நிரம்பி வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com