கடந்த 2 நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை...

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொட்டி வரும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த 2 நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை...

நாமக்கல்: திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மல்ல சமுத்திரம், பாலமேடு ஹாஸ்டல் பகுதியில் உள்ள ஆதி திராவிடர் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது.

சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்ததால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்த கன மழை காரணமாக அந்தியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

மேலும் படிக்க | குண்டேரிப்பள்ளம் அணை முழு கொள்ளளவை எட்டியது...! பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!

சேலம் மாவட்டம் எடப்பாடி சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. நைனாம்பட்டி, கா-புதூர் பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. வெள்ளப்பெருக்கு காரணமாக பூலாம்பட்டி படகு துறையில் பக்கவாட்டு சுவர் சரிந்து விழுந்தது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப் பகுதியில் பெய்த கன மழையால் மல்லியம்மன் துர்கம் கோவில் அருகே மழை நீர் சாலையை மூழ்கடித்தவாறு  செல்கிறது. இதனால் சத்தியமங்கலம் - கடம்பூர் சாலையில் 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மேலும் படிக்க | ஒகேனக்கல் அருவியில் ஆர்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. சுற்றுலாப் பயணிகளுக்கு தடை..!