ஓட்டுநர், நடத்துனர் வார இறுதி நாட்களில் தவறாது பணிக்கு வர உத்தரவு...!!

ஓட்டுநர், நடத்துனர் வார இறுதி நாட்களில் தவறாது பணிக்கு வர உத்தரவு...!!
Published on
Updated on
1 min read

வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் தவறாது பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு பொதுமக்கள் நலன் கருதி பேருந்துகளை நாள்தோறும் இயக்கி வருகிறது.வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், திருமணம் முகூர்த்தம், பண்டிகை போன்ற விசேஷ நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதோடு, அதிக பேருந்துகளுக்கான தேவையும் இருக்கிறது. ஆனால் இது போன்ற நாட்களில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சரியாக வேலைக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுந்தன. இந்நிலையில் அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களும் பொதுமக்களின் நலன் கருதி பண்டிகை நாட்களில் விடுப்பு எடுப்பதை தவிர்த்து தவறாது பணிக்கு வர போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் விழா காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓட்டுநர், நடத்துநர்களிடம் "Control chart"ல் கையொப்பம் பெற்று பேருந்துகளை இயக்க வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து அனைத்து மண்டல மேலாளர்களும் நடை இழப்பின்றி பேருந்துகள் இயக்கப்படுவதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com