திமுக அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்யவில்லை என சாலை மறியல் - போலீசார் கைது

பஞ்சப்படியை வழங்க கோரி போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் சாலை மறியல் போராட்டம்-
திமுக அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்யவில்லை என சாலை மறியல்  - போலீசார் கைது
Published on
Updated on
1 min read

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள பஞ்சபடியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த அதிமுக ஆட்சியில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது.திமுக ஆட்சிக்கு வந்தவுடன் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று சட்டமன்றத் தேர்தலில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்து பல மாதங்கள் ஆகியும் கோரிக்கை நிறைவேற்றப் படவில்லை. இதை கண்டித்து அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போராட்டத்தை கைவிடச் செய்தனர்.தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனால் அப்குதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  இன்று பல்வேறு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முதலமைச்சர் வருகை தந்து அண்ணா விளையாட்டு மைதானத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இந்த சாலை மறியல் நடைபெற்றுள்ளது

 மேலும் இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com