ராகுல் காந்தி நடைபயணத்தில் பாதுகாப்பு இல்லை - ரிசர்வ் போலீஸ் பதில்

ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.

ராகுல் காந்தி நடைபயணத்தில் பாதுகாப்பு இல்லை - ரிசர்வ் போலீஸ் பதில்

இந்திய ஒற்றுமைப் பயணத்தில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்திக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாகவே உள்ளதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை அறிவித்துள்ளது. டெல்லியில் பாதயாத்திரையைத் தொடங்கிய போது ராகுல்காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படாததாகக் கூறி, காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

மேலும் படிக்க | வாக்காளர் அட்டை-ஆதார் இணைப்பு : இன்று ஆலோசனை

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதப்பட்டது. இந்நிலையில் அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் கண்டிப்புடன் பின்பற்றதாகவும், போதுமான அளவு போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சிஆர்பிஎஃப் தெரிவித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு முதல் இந்த பாதயாத்திரை உட்பட 113 விதிமீறல்கள் நடைபயணங்களில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அரசிலமைப்பை காப்போம் கையோடு கை கோர்ப்போம் - காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு