வாக்காளர் அட்டை-ஆதார் இணைப்பு : இன்று ஆலோசனை

வாக்காளர் அட்டை-ஆதார் இணைப்பு : இன்று ஆலோசனை

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். வரைவு வாக்காளர் பட்டியலின்படி 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் தமிழகத்தில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

மேலும் படிக்க | அரசிலமைப்பை காப்போம் கையோடு கை கோர்ப்போம் - காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு

தொடர்ந்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் உடன் இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்ய பிரதா சாஹு இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.