ஆர்.எஸ்.பாரதிக்கு 48 மணி நேரம் அவகாசம்...விளக்கம் அளிக்காவிட்டால்...அண்ணாமலை பரபரப்பு அறிக்கை!

ஆர்.எஸ்.பாரதிக்கு 48 மணி நேரம் அவகாசம்...விளக்கம் அளிக்காவிட்டால்...அண்ணாமலை பரபரப்பு அறிக்கை!
Published on
Updated on
1 min read

திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள தயார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக ஊழல் பட்டியலை வெளியிட்டார். இது தொடர்பாக அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இழப்பீட்டு தொகையாக 500 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும், இதை 48 மணி நேரத்திற்குள் செய்யாவிட்டால், வழக்கு தொடரப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், நோட்டீஸ் அனுப்பிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கோடிகளில் சொத்துக்களை குவித்து வைத்திருக்கும் திமுக அமைப்பு செயலாளர், தன்னிடம் 500 கோடி ரூபாய் கேட்பதாகவும், திமுக அனுப்பிய இழப்பீடு நோட்டீஸை சட்டப்படி தான் சந்தித்த தயார் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும், திமுக ஆட்சிக் காலத்தில், சென்னை மெட்ரோ ரயில் தொடர்பாக நடைபெற்ற ஊழல் குறித்து அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாகவும், அவற்றை சிபிஐயிடம் அளிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தன் மீதும், தனது கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு 48 மணி நேரத்தில்  விளக்கம் அளிக்காவிட்டால், ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு தொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டு அவருக்கு எதிராக தனது கண்டனத்தை அண்ணாமலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com