ஒரு வருடமாக போக்கு காட்டி வந்த கருப்பனை பிடித்த வனத்துறையினர்...நிம்மதியடைந்த விவசாயிகள்!

ஒரு வருடமாக போக்கு காட்டி வந்த கருப்பனை பிடித்த வனத்துறையினர்...நிம்மதியடைந்த விவசாயிகள்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடந்த ஒரு வருடங்களாக போக்கு காட்டி வந்த கருப்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியிலிருந்து உணவுக்காக அவ்வப்போது, வெளியேறும் யானைகள் தொடர்ந்து  விவசாய பயிர்களை சேதம் செய்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக தாளவாடி மற்றும் ஜீரகள்ளி உள்ளிட்ட பகுதி விவசாய நிலங்களுக்குள் புகுந்து கருப்பன் என்ற ஒற்றை யானை விவசாய பயிர்களை சேதம் செய்தும் விவசாயிகளை அச்சுறுத்தியும் வந்தது.

இதையும் பிடிக்க : நீட் தேர்வு விவகாரத்தில்... அனிதாவுக்கு ஒரு நீதி.... நிஷாவுக்கு ஒரு நீதியா...? - சட்டசபையில் பரபரப்பு....!

இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து சின்னத்தம்பி மற்றும் மாரியப்பன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை தாளவாடி வனப்பகுதியை ஒட்டியுள்ள மகராஜன்புறம்  பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த கருப்பனை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.