புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க பாஜக எதிர்ப்பு

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க பாஜக எதிர்ப்பு
Published on
Updated on
1 min read

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து வேண்டும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் மாநில அந்தஸ்த்து கொடுத்தால் மக்கள் வளர்ச்சி எப்படி இருக்கும் என்ற புரிதல் இல்லை எனவும் மக்களுக்கு நலன் பயக்கும் விஷயத்தில் மட்டுமே பாஜகவின் நிலைப்பாடு இருக்கும் என புதுச்சேரி பா.ஜ.க தலைவர் சாமிநாதன் கருத்து.

புதுச்சேரி பா.ஜ.க மாநில தலைவர் சாமிநாதன் எல்லைபிள்ளை சாவடியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில்  செய்தியாளர்களை சந்தித்தபோது கடந்த 16 மற்றும் 17ந்தேதிகளில் டில்லியில் தேசிய தலைவர் நட்டா தலைமையில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அப்போது புதுச்சேரியில் மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய செயற்குழுவில் பாராட்டப்பட்டதாக சாமிநாதன் தெரிவித்தார்.

தொடர்ந்து புதுச்சேரிக்கு மாநில அந்த்ஸ்த்து தரவேண்டும் என்று தேசியஜனநாயக கூட்டணியில் உள்ள முதல்வர் ரங்கசாமி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இன்று கூட புதுச்சேரிக்கு வந்த மத்திய சட்டத்துறை அமைச்சரிடம் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து வழங்க உள்துறை அமைச்சகத்தை வலியுறுத்த வேண்டும் என கடிதம் கொடுத்துள்ளாரே இதில் பாஜகவின் நிலைப்பாடு என்ன  என செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு பதில் அளித்த சாமிநாதன், மாநில அந்தஸ்த்து கொடுத்தால் மக்கள் வளர்ச்சி எப்படி இருக்கும் என்ற புரிதல் இல்லை எனவும் 15 லட்சம் மக்கள் தொகை உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மத்திய அரசு ரூ 10 ஆயிரம் கோடியை  கொடுக்கின்றது, அதே வேலையில், மாநில அந்தஸ்த்து பெற்ற கோவா நிதிநெருக்கடியில் உள்ளது யூனியன் பிரதேசமாக இருந்த போது கிடைத்த வருவாய் தற்போது கிடைக்கவில்லை ஆகவே மாநில அந்தஸ்த்து கொடுத்தால் மாநில மக்களின் நிலைப்பாடு என்னவாகும் என்பதை உறுதி செய்ய வேண்டும் மக்களுக்கு நலன் பயக்கும் விஷயத்தில் மட்டுமே பாஜகவின் நிலைப்பாடு இருக்கும்  பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com