புது தில்லியை மையமாகக் கொண்டு செயல்படும் Annual Status of education Report என்ற தனியார் அமைப்பு தமிழகத்தில் 31 மாவட்டங்களில் உள்ள மூன்று முதல் 16 வயது வரையிலான மாணவர்களின் படிப்பாற்றல் குறித்து ஆய்வு மேற்கொண்டது இந்த ஆய்வில் 970 கிராமங்களில் உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்படுத்தப்பட்டனர்
இந்த ஆய்வில் 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் மாணவர்களுடைய கற்றல் திறன் வெகுவாக குறைந்திருப்பது கண்டறியப்பட்டது குறிப்பாக கொரோனா காலகட்டங்களில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டதன் காரணமாக மாணவர்களில் கற்றல் திறனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனியார் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | எஸ் எஸ் சி தேர்வு இனிமேல் தமிழில் எழுதலாம்
வகுப்பு வாரியாக மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் மூன்றாம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் 4.8% பேர் மட்டுமே இரண்டாம் வகுப்புக்கான பாடத்திட்டத்தை படிக்கும் ஆற்றல் பெற்றுள்ளதாகவும் 2018 ஆம் ஆண்டு இது 10.2 சதவீதமாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே இரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தை படிக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாகவும் இது 2018 ஆம் ஆண்டு 40 சதவீதமாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 63% பேர் மட்டுமே 2 ஆம் வகுப்புக்கான பாடத்திட்டத்தை பயிலும் ஆற்றல் பெற்றுள்ளனர் என்றும் இது 2018 ஆம் ஆண்டு 73 சதவீதமாக இருந்தது என்றும் தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு மாணவர்களின் படிப்பாற்றல் குறைந்திருக்கும் நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் பள்ளிக்கு வரும் மாணவர்களின் உடைய எண்ணிக்கை அதிகரித்து இருப்பதும் இந்த அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது