தமிழ்நாட்டில் பாஜக இருக்கவே இருக்காது
தமிழ்நாட்டு மக்கள் பற்றி டெல்லியில் என்ன பேசினார் அண்ணாமலை?பணக்காரர்களுக்கு மட்டும் கடன்களை தள்ளுபடி பண்ணும் மத்திய அரசு ஏன் மக்களுக்கு தள்ளுபடி பண்ணக்கூடாது இனிமேல் தமிழகத்தில் பாஜக வெற்றி பெறவே பெறாது.பாஜக ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது.பாஜக தமிழத்திலும் இந்தியாவிலும் இருக்காது. காரணம் அவர்கள் சுயநலமாக வாழ்கிறார்கள். இதுவரை சட்டம் ஒழுங்கு சரியில்லை என சொல்கிறார்கள் எந்த ஊரில் என்ன சட்ட ஒழுங்கு பாதித்திருக்கிறது சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்
மேலும் படிக்க | நம்ம ஸ்கூல்" திட்டம் - கல்வியில் நம்பர் ஒன் ஆகப்போகும் தமிழ்நாடு
அதிமுக கட்சியே கிடையாது.
வேலுமணியும் தங்கமணியும் எடப்பாடி ஒரு கம்பெனி நடந்தபோகிறார்கள். அதுவும் காலபோக்கில் இரண்டு மூன்றாக போயிடும் அதிமுக ஒருகட்சியே கிடையாது . அதிமுக கட்சிக்கு யாரும் தலைவர் கிடையாது அதிமுக கட்சியே கிடையாதே. இப்போ இடைதேர்தலோ முனிஸ்பாலிட்டி தேர்தல் நடக்கட்டுமே யாருக்கு இரட்டை இலை சின்னம் கொடுப்பாங்க. அப்போ அதிமுக கட்சியே இல்லைதானே அர்த்தம். இன்னும் ஒருமாசத்தில் கட்சியும் போய்டும் சின்னமும் போய்டும் கொடியும் போய்டும் அப்றம் இவர்கள் எல்லாம் சும்மா அன்னகாவடி மாதிரி திரியவேண்டி வரும். அதிமுகவினர் இருக்க வேண்டியிடம் திமுக தான். எதிர்காலம் நல்லா இருக்க வேண்டுமென்றால் திமுகவில் வந்து இணைய சொல்லுங்க.
மேலும் படிக்க | ஆர்பாட்டத்தின் போது பாண்லே பூத் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு
தங்கமணியும் வேலுமணியும் லஞ்சஒழிப்பு துறையிடமிருந்து தப்பிக்கவே அண்ணாமலை என்ன சொன்னாலும் அமைதியாக இருக்கிறார்கள் அண்ணாமலை தமிழகத்தில் 39 இடங்களில் ஜெயிபோம்னு சொல்ல காரணம் என்ன