கடலூர் அருகே தொடக்கப்பள்ளி பள்ளி சிறார்களை பாத்திரங்கள் சுமக்க வைத்த அவலம்....!

கடலூர் அருகே தொடக்கப்பள்ளி பள்ளி சிறார்களை பாத்திரங்கள் சுமக்க வைத்த அவலம்....!
Published on
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தொடக்கப்பள்ளி சிறார்களை சத்துணவு பணியாளர் பாத்திரம் சுமக்க வைத்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மேமாத்தூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 18 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் சமையலராக உள்ள நீலாவதி என்பவர் பள்ளியில் சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரங்கள் காலை உணவு திட்டத்திற்கு வழங்கப்பட்ட  பாத்திரங்களை அதே கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு மாணவச் செல்வங்களை சுமந்து செல்ல வைத்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி உள்ளது.

புத்தகப் பையை சுமந்து செல்லும் அளவிற்கு கூட வளராத சிறுவர் சிறுமிகளை பாத்திரங்கள் மற்றும் காய்கறி வெட்டும் அருவாள்மனை உள்ளிட்ட பொருட்களை சுமந்து செல்ல வைத்தது, அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிக்கு படிக்க வந்த சிறுவர்களை பாத்திரம் சுமக்க வைத்த பணியாளர் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com