வீராணத்திலிருந்து வீணாக வெளியேற்றப்படும் நீர்; வறட்சி ஏற்படும் அபாயம்!

வீராணத்திலிருந்து வீணாக வெளியேற்றப்படும் நீர்; வறட்சி ஏற்படும் அபாயம்!
Published on
Updated on
1 min read

வீராணம் ஏரிக்கு நீர்மட்ட சரிவை ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் நீரை வீணாக வெளியேற்றி வருகவதாகவும் இதனால் சம்பா பருவத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்குமா? எனவும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் நீர்மட்டம் தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஏரிக்கு புதியதாக நீர்வரத்து இல்லாத நிலையில், இரண்டு தினங்களாக ஏரியிலிருந்து பராமரிப்பு பணிகள் என்ற பெயரில் தேவையே இல்லாமல் ஏரியின் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏற்கனவே மேட்டூரில் நீர்மட்டம்  பாதியாக குறைந்துவிட்டநிலையில், மேட்டூரிலிருந்து இன்னும் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து  இல்லை.

இது ஒருபுறமிருக்க ஏரியின் மேற்கு பகுதி கரையில் விவசாய வயல்களுக்குள் ஏரித் தண்ணீர் புகுந்ததால் 50 ஏக்கருக்கும் மேற்பட்டபல்வேறு சாகுபடி பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. வீரணாம் ஏரியின் மொத்த நீர்மட்டம்  47.50 அடியில் தற்போது 46 அடியாக உள்ளது. இதனால், இரண்டு தினங்களாக தேவையில்லாமல்   வெளியேற்றப்படும் நீரை கண்டு விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். வரும் சம்பா பருவத்திற்கு போதுமான தண்ணீர் இருக்குமா? எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். நீரை வெளியேற்றுவதை நிறுத்தாவிட்டால், கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் வீராணம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரானது சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்து உள்ளனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com