எங்களுக்கு மகாராஷ்டிரா வேண்டாம்...தெலுங்கானா தான் வேணும்...மக்கள் கூற காரணம் என்ன?!!!

எங்களுக்கு மகாராஷ்டிரா வேண்டாம்...தெலுங்கானா தான் வேணும்...மக்கள் கூற காரணம் என்ன?!!!
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிரா அரசை விட தெலுங்கானா அரசிடமிருந்து அதிக சலுகைகளை பெறுவதால், இங்குள்ள மக்கள் தெலுங்கானாவுடன் செல்ல விரும்புகிறார்கள்.

பிரிக்க கோரிக்கை:

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா இடையேயான எல்லைப் பிரச்சினையே இன்னும் ஓய்ந்தபாடில்லை.  அதற்குள்ளாக தெலுங்கானாவை ஒட்டிய மாநிலத்தின் சில கிராமங்களில் இருந்தும் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  தெலுங்கானாவை ஒட்டியுள்ள மகாராஷ்டிராவின் 14 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களை தெலுங்கானாவுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளனர். 

காரணம் என்ன?:

மகாராஷ்டிரா அரசை விட தெலுங்கானா அரசிடமிருந்து அதிக சலுகைகளை பெறுவதால், இங்குள்ள மக்கள் தெலுங்கானாவுடன் செல்ல விரும்புகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  தெலுங்கானா அரசு இங்குள்ள மூத்த குடிமக்களுக்கு 1,000 ரூபாய் வரை ஓய்வூதியம் வழங்குகிறது.  இது தவிர, 10 கிலோ ரேஷனுடன் மேலும் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.  இங்குள்ள மக்கள் கூறுகையில் தெலுங்கானா அரசால் பல நன்மைகளைப் பெற்றுள்ளோம் எனவும் இங்குள்ள மக்களுக்கு அதிக சலுகைகளை வழங்க மகாராஷ்டிராவிடம் கோரிக்கை வைத்துள்ளோம் எனவும் கூறியுள்ளனர்.

மகாராஷ்டிரா அறிக்கை:

14 கிராமங்களைச் சேர்ந்த 70-80 சதவீத மக்கள் மகாராஷ்டிராவில் வாழ விரும்புகிறார்கள் எனவும் தெலுங்கானாவில் இணைவதற்கு ஆதரவாக சில மக்கள் மட்டுமே உள்ளனர் எனவும் மகாராஷ்டிராவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த விஷயத்தில் தெலுங்கானா தரப்பில் எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com