ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பங்காருபாளையம் மண்டலம் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. அந்த பகுதியில் நடமாடும் யானைகள் அடிக்கடி விவசாயிகளின் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சாப்பிட்டு சேதம் செய்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று இரவு பங்காருபாளையம் அருகே உள்ள முகிலி கிராமத்தைச் சேர்ந்த ஜக்கையா என்பவருடைய விளை நிலத்தில் யானை கூட்டம் ஒன்று புகுந்து பயிர்களை சாப்பிட்டு சேதப்படுத்தி சென்றது. இந்த நிலையில் அவற்றில் ஒரு ஆண் யானை அங்கு இருக்கும் கிணற்றில் விழுந்து விட்டது.
இன்று அதிகாலை முதல் யானையின் பிளிறல் சத்தம் அதிகமாக கேட்டதால் அந்த பகுதிக்கு சென்ற பொதுமக்கள் கிணற்றுக்குள் யானை தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
வனத்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆகியோர் விரைந்து சென்று யானையை மீட்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க | உல்லாசமாக சுற்றித் திரியும் கரடி மற்றும் யானை...