உத்தர பிரதேச உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு ஜனவரி 4ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உத்தரபிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
உச்சநீதிமன்ற விசாரணை:
உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வழக்கை ஜனவரி 4ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு மனு:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உத்திரப் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அரசின் அறிவிப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காரணம் என்ன?:
கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி, உத்தர பிரதேச அரசு உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இடஒதுக்கீட்டை நிர்ணயிப்பதில் உச்ச நீதிமன்றத்தின் மும்முறை சோதனை ஃபார்முலாவை உ.பி அரசு பின்பற்றவில்லை என்று அதில் காரணம் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, இடஒதுக்கீடு அறிவிப்பை ரத்து செய்த உயர்நீதிமன்றம், ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது எனக் கூறி அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
-நப்பசலையார்