குத்தகை கட்ட முடியாமல் தவிக்கும் எலான் மஸ்க்...வழக்கு தொடர்ந்த குத்தகை நிறுவனம்!!!

ட்விட்டர் அதன் சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்திற்கு 136,250 டாலர் வாடகை செலுத்தவில்லை. இதையடுத்து அந்த நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
குத்தகை கட்ட முடியாமல் தவிக்கும் எலான் மஸ்க்...வழக்கு தொடர்ந்த குத்தகை நிறுவனம்!!!
Published on
Updated on
1 min read

எலான் மஸ்க் ட்விட்டரின் பொறுப்பை ஏற்றது முதல், நிறுவனத்தின் மோசமான பொருளாதார நிலையை அவர் தொடர்ந்து மேற்கோள் காட்டி வருகிறார்.  செலவைக் குறைக்கும் வகையில்,ஊழியர்கள் ஆட்குறைப்பு முதல் அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் வரை குறைத்துள்ளார்.  இந்த அளவிற்கு நடவடிக்கை எடுத்த பிறகும், அலுவலகங்களுக்கு வாடகையை கூட செலுத்த முடியாத அளவுக்கு அந்த நிறுவனத்தின் நிலை மோசமாக உள்ளது. 

டிசம்பர் 13 தேதியிட்ட அறிக்கையின்படி, ட்விட்டர் உலகெங்கிலும் உள்ள அதன் அலுவலகங்கள் மற்றும் தலைமையகங்களுக்கான வாடகையை செலுத்த முடியவில்லை எனவும் ட்விட்டரின் சான்பிரான்சிஸ்கோ அலுவலகத்திற்கான வாடகையை செலுத்தாததற்காக ட்விட்டர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

ட்விட்டர் தனது சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்திற்கு 136250 டாலர் வாடகை செலுத்தவில்லை என்று குத்தகை நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.   சான் பிரான்சிஸ்கோவின் ஹார்ட்ஃபோர்ட் கட்டிடத்தின் 30 வது மாடியில் உள்ள நிறுவனத்தின் குத்தகை இன்னும் ஐந்து நாட்களில் காலாவதியாகும் என்று டிசம்பர் 16 அன்று நிறுவனத்தை எச்சரித்ததாக குத்தகை விடப்பட்ட நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதை தொடர்ந்தும் வாடகை செலுத்தாததால் ட்விட்டர் மீது வழக்கு தொடர்ந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com