வெங்காயாம் விலை வீழ்ச்சி... கோபமடைந்த விவசாயிகள்!!!

வெங்காயாம் விலை வீழ்ச்சி... கோபமடைந்த விவசாயிகள்!!!
Published on
Updated on
1 min read

கோபமடைந்த விவசாயிகள் மகாராஷ்டிராவின் லாசல்கான் வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவில் வெங்காய ஏலத்தை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.  

விலை வீழ்ச்சி:

தொடர்ந்து வெங்காயத்தின் விலை வீழ்ச்சியால் விரக்தியடைந்த விவசாயிகள் மண்டியில் வெங்காய விற்பனையை நிறுத்தியுள்ளனர்.  மகாராஷ்டிராவின் லாசல்கான் வேளாண் விளைபொருள் சந்தையில் கோபமடைந்த விவசாயிகள் வெங்காய ஏலத்தை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.  

ஆசியாவின் மிகப்பெரிய வெங்காயச் சந்தையான லாசல்கான் வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவில், வெங்காயத்தின் விலை சமீப காலமாக ஒரு கிலோவுக்கு இரண்டு முதல் நான்கு ரூபாய் வரை குறைந்துள்ளது.  இது வெங்காய விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை அதிகரித்துள்ளது.

வேண்டும் இழப்பீடு:

உடனடியாக விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.1500 வரை இழப்பீடு வழங்கிடவும், அவர்களின் விளைபொருட்களை கிலோ ரூ.15 முதல் 20 வரை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.  இதைச் செய்யாவிட்டால், லாசல்கான் வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவில் ஏலத்தைத் தொடர அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

நிறைவேற்றப்படுமா?:

வெங்காயம் கிலோ 3 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது என தெரிவித்த விவசாயிகள் நிவாரணம் அளிக்கும் வகையில் கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்யப்பட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.  

இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவில் வெங்காய ஏலம் எந்த சூழ்நிலையிலும் தொடங்காது என விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  கோபமடைந்த வெங்காய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஏலம் தொடங்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com