புதிய நாடாளுமன்றம் கட்டடம் - 24 மணி நேரமும் கண்காணிப்பு!

புதிய நாடாளுமன்றம் கட்டடம் - 24 மணி நேரமும் கண்காணிப்பு!
Published on
Updated on
1 min read

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லி நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை 970 970 கோடி ரூபாய் மதிப்பில் மத்திய அரசு புதுப்பித்துள்ளது. மேலும், இந்த புதிய கட்டிடத்தை வரும் மே 28 ஆம் தேதி அதாவது சவார்க்கரின் பிறந்தநாளன்று திறக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், கட்டிடத்தை திறக்கும் விழாவிற்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கவில்லை. மத்திய அரசின் இந்த செயல்பாட்டை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கட்டிட திறப்பை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். 

இதனையடுத்து, டெல்லி நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று அமித்ஷா திட்டவட்டமாக கூறினார். இதனைத்தொடர்ந்து, டெல்லி நாடாளுமன்றக் கட்டிடத்தை 20 எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.

இந்நிலையில் கட்டிடத்தில் தேசவிரோத வாசகங்கள் எழுதப்படலாம் எனக்கருதி புதிய கட்டிடம் முன் போலீசார் குவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலையை ஆராய சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதோடு, கட்டிடம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com