அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் வீட்டில் 2வது நாளாக ஐடி ரெய்டு...!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் வீட்டில் 2வது நாளாக ஐடி ரெய்டு...!
Published on
Updated on
1 min read

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டைத் தொடர்ந்து, அவரது நண்பர் வீட்டில் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நேற்றைய தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அத்துடன் அமைச்சருக்கு சொந்தமான இடங்களிலும், நெருங்கிய நண்பர்கள் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

இந்நிலையில், பொள்ளாச்சி அடுத்த தம்மம்பதி கிராமத்தை சேர்ந்தவரும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பருமான அரவிந்த் என்பவர், கோவை மாவட்டத்தில் போதை மறுவாழ்வு மையம் நடத்தி வருகிறார். இவரின் பண்ணை வீட்டில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com