இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். அவருக்கு அடுத்து தேர்தல் ஆணையராக அனுப் சந்திரா பாண்டே பதவி வகித்து வரும் நிலையில் புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹிமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தொடர்ந்து கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக அருண் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் 1985-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பணி அமர்த்தப்பட்ட அருண் கோயல், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா உடன் இணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
இதையும் படிக்க : குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி...