குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி...

குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு உலக தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி...
Published on
Updated on
1 min read

குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு உலக தினத்தை (World Day for Prevention of Child Abuse) முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவுப்படி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பள்ளிகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பள்ளி மாணவ மாணவிகளை காவல் நிலையங்களுக்கு அழைத்தும், பள்ளிக்கூடங்களுக்கு சென்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் எபநேசர், உதவி ஆய்வாளர் ஜான்சன் மற்றும் பயிற்சி உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் ஆகியோர் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

காவல் நிலையத்தில் கைதி அறை, ஆயுதங்கள் வைக்கும் அறை மற்றும் காவல் அதிகாரிகளின் அறை உள்ளிட்ட இடங்களை மாணவ மாணவிகளுக்கு காண்பித்தனர்.

அதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் காவலர்கள் பயன்படுத்தும் கைத்துப்பாக்கி துப்பாக்கிகள், வயர்லெஸ் வாக்கி டாக்கி ஆகியவற்றை குறித்தும், கண்காணிப்பு கேமராக்கள் குறித்தும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கூடுதலாக பள்ளி மாணவ மாணவிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் லிங்கத்துரை,ஜான் மற்றும் ஆசிரியை ஸ்டெஃபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com