மறைந்த முன்னாள் அமைச்சர் சரத்....இரங்கல் தெரிவித்த முதலமைச்சர்!!!

மறைந்த முன்னாள் அமைச்சர் சரத்....இரங்கல் தெரிவித்த முதலமைச்சர்!!!
Published on
Updated on
1 min read

உடல்நலக்குறைவால் காலமான முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவின் இல்லத்திற்கு நேரில் சென்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார்.

பொது வாழ்வு:

ஐக்கிய ஜனதாதள கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ், எமர்ஜென்சி காலத்தில் ஜெயபிரகாஷ் நாராயண் இயக்கத்தின் தாக்கத்தால் பொதுவாழ்வுக்கு வந்தார். 

ஏழு முறை மக்களவை உறுப்பினராகவும், 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வான சரத்யாதவ், 1989ம் ஆண்டு மத்திய அமைச்சராக பதவியேற்றார். 

தனிக்கட்சி:

கடந்த 2018ம் ஆண்டு முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், ஐக்கிய ஜனதாதள கட்சியில் இருந்து விலகி அவர் தனிக்கட்சி தொடங்கினார்.

மறைவு:

இந்நிலையில் உடல்நலக்குறைவால் சமீபகாலமாக சிகிச்சை பெற்று வந்த அவர், குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை  பலனின்றி காலமானார்.  தொடர்ந்து அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ஆறுதல் தெரிவித்த ராகுல்:

இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூரில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று, சரத் யாதவிற்கு ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார்.  அத்துடன் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆரத்தழுவி  ஆறுதல் கூறினார்.

முதலமைச்சர் இரங்கல்:

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சரத் யாதவுக்கு இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com