தொடர் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி...பாஜக வெற்றியை ஈட்டுமா?

தொடர் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி...பாஜக வெற்றியை ஈட்டுமா?
Published on
Updated on
1 min read

குஜராத்தின் சுரேந்திரநகரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குசேகரிப்பில் பிரதமர் மோடி ஈடுபட்டார்.

மும்முனை போட்டி:

182 சட்டசபை தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்துக்கு சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. குஜராத்தை பொறுத்தமட்டில் தற்போது மும்முனை போட்டி நிலவி வருவதால், ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. 

அதிக கவனம் செலுத்தும் பாஜக:

குஜராத்தில் நீண்ட காலமாக ஆட்சி செய்து வரும் பாஜக, இந்த தேர்தலிலும் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகிறது. அத்துடன் பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சருக்கும் சொந்த மாநிலம் என்பதால் இருவரும் தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

நேரடியாக களத்தில் இறங்கிய மோடி:

சொந்த மாநிலம் என்பதால், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் நரேந்திர மோடி பல கட்டங்களாக குஜராத்துக்கு விசிட் செய்து பல ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் முழு ஈடுபாடுடன் செயல்பட்டு வரும் பிரதமர் மோடி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். 

சுரேந்திரநகரில் பிரச்சாரம்:

இந்நிலையில் குஜராத் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் நேரடியாக இறங்கியுள்ள பிரதமர் மோடி, கடந்த 2 நாட்களாக பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில், இன்று சுரேந்திரநகரில் தொண்டர்களிடையே பேசிய பிரதமர் மோடி, தன்னைப் பல பெயர்களில் அழைக்கும் காங்கிரசார், வளர்ச்சிப் பிரச்னைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்றும், குஜராத்தில் இம்முறையும் பாஜகவே வெற்றிபெறும் எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார். இந்த பின்னணியில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, சூரத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com