ராஜஸ்தானில் காஷ்மீரிகளின் கம்பளி கடைகளில் தீ விபத்து...விபத்திற்கான காரணம் என்ன?!!

ராஜஸ்தானின் லூதியானாவின் கம்பளி சந்தையில் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் கம்பளியிலான ஆடைகள் கடைகளை அமைத்திருந்தனர்.  அங்கு இரவு 10.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.   
ராஜஸ்தானில் காஷ்மீரிகளின் கம்பளி கடைகளில் தீ விபத்து...விபத்திற்கான காரணம் என்ன?!!
Published on
Updated on
1 min read

பிகானேர் அருகே உள்ள லூதியானா கம்பளி சந்தையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் சுமார் நாற்பது கடைகளில் தீ பரவியுள்ளது.   

திடீரென விபத்து:

ரத்தன் பிஹாரி பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள லூதியானா கம்பளி சந்தையில் திங்கள்கிழமை இரவு 10.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.  தீ பரவிய சில நிமிடங்களில் மார்க்கெட் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

தகவலின் பேரில் 6 வாகனங்களில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.  சுமார் ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.  

போலீசார் கடைகளில் சென்று பார்த்தபோது, ​​எரிந்த நிலையில் முதியவர் ஒருவர் சடலமாக இருந்தார்.  உயிரிழந்தவர் ரம்ஜான் (55 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் தூக்கத்தில் இருந்த ரம்ஜான் வெளியே வர முடியாமல் உயிருடன் எரிந்ததாக கூறப்படுகிறது. 

விபத்தில் பாதிப்பு:

சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளது. இரவு 10.15 மணியளவில் இரண்டு மூன்று கடைகளில் இருந்து புகை வெளியேறியதாக கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து மார்க்கெட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

விபத்து காரணம்:

மார்க்கெட் அருகே இரவு நேரத்தில் ஊர்வலம் சென்றதாக கடைக்காரர்கள்  தெரிவித்துள்ளனர். ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.  

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com