நீதிபதிகள் நியமனத்திலும் தலையிடுகிறதா மத்திய அரசு?!!  என்ன சொல்கிறது உச்சநீதிமன்றம்!!!

நீதிபதிகள் நியமனத்திலும் தலையிடுகிறதா மத்திய அரசு?!! என்ன சொல்கிறது உச்சநீதிமன்றம்!!!

Published on

நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரை செய்வதை கொலீஜியம் நிறுத்தியதையடுத்து, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.   திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவும் அரசாங்கத்தை கடுமையாகத் தாக்கியுள்ளார். 

கொலீஜியம் பரிந்துரை:

நீதிபதிகள் நியமனத்தில் சீனியாரிட்டி முறையிலான நியமனம் மிகவும் மோசமடைந்து வருகிறது.  கொலீஜியம் பரிந்துரைத்த பெயர்களில் ஒன்றை மட்டுமே அரசாங்கம் பலமுறை எடுத்துக்கொள்கிறது என நீதிமன்ற அமர்வு கூறியிருந்தது.  

உச்சநீதிமன்றம் கண்டனம்:

கொலீஜியம் நீதிபதிகளின் பெயர்களை பணி மூப்பு அடிப்படையிலேயே பரிந்துரை செய்கிறது.  ஆனால்  ​​கடந்த இரண்டு மாதங்களாக அரசாங்கத்தின் தலையீட்டினால் கொலீஜியத்தின் முழு செயல்முறையும் முடங்கியுள்ளதாக உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.   இந்த சிக்கலை தீர்க்கவும் இது குறித்து முடிவு எடுக்கவும் எங்களை வற்புறுத்த வேண்டாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

கண்டனம் தெரிவித்த மஹுவா:

உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ட்வீட்டில் பதிவிட்ட மஹுவா மொய்த்ரா, “ கொலீஜியம் ஒரு பரிந்துரையை அளித்தவுடன், இந்த விவகாரம் அங்கு முடிவுக்கு வர வேண்டும்.  11 பெயர்களை மத்திய அரசு நீக்காதது நீதித்துறையின் முக்கியமான  நியமனங்களில் கூட பாஜகவின் சர்வாதிகாரம், மதவெறி மற்றும் பழிவாங்கும் போக்கை காட்டுகிறது. இது அசிங்கம்.” எனப் பதிவிட்டுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com