கொரோனா தடுப்பூசி மரணங்கள்... என்ன சொல்கிறது மத்திய அரசு?!!

கொரோனா தடுப்பூசி மரணங்கள்... என்ன சொல்கிறது மத்திய அரசு?!!
Published on
Updated on
1 min read

கொரோனா தடுப்பூசி காரணமாக கடந்த ஆண்டு இரண்டு இளம் பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது.  

கொரோனா வழக்கு:

கொரோனா தடுப்பூசி காரணமாக கடந்த ஆண்டு இரண்டு இளம் பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது.  

கடந்த ஆண்டு கோவிட் தடுப்பூசி போட்ட பிறகு சிறுமிகள் இருவர் இறந்துள்ளனர்.  அவர்களின் பெற்றோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கோரிக்கை:

கோவிட் தடுப்பூசியால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தடுப்பூசிக்குப் பிறகு ஏதேனும் பாதகமான விளைவுகள் ஏற்படுமானால் சரியான நேரத்தில் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க மருத்துவ  நிபுணர்  குழுவை அமைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. 

விசாரணை:

கடந்த ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் தடுப்பூசி மரணம் சார்பாக விளக்கம் கோரியிருந்தது.

மத்திய அரசு விளக்கம்:

உச்சநீதிமன்றத்திற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.  அரசு சார்பில் பிரமாணப் பத்திரத்துடன் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவானது இரண்டு சிறுமிகளின் பெற்றோர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் உள்ளது.  
 
தடுப்பூசியால் மரணம் ஏற்பட்டால், சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து இழப்பீடு கோரலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

பொறுப்பேற்க முடியாது:

தொடர்ந்து அந்த பத்திரத்தில் கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.  மேலும் இறந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் மீது முழு அனுதாபங்கள் இருப்பதாகவும், ஆனால் தடுப்பூசியின் எதிர்மறையான விளைவுகளுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com