இனி வரும் காலங்களில் விவசாயிகளுக்கு மின் கட்டணம் பூஜ்ஜியமாக இருக்கும் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் உள்ள மஹாபுராவில் பணவீக்க நிவாரண முகாம் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், விவசாயிகளுக்கு 2 ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம் வழங்கியுள்ளதாகவும், அது இனிவரும் காலங்களில் பூஜ்ஜியமாக இருக்கும் எனவும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், புற்று நோயால் இறக்கும் கறவை மாடுகளுக்கு பசு ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் அசோக் கெலாட் குறிப்பிட்டுள்ளார்.