ஓசியில் பெட்ரோல் கேட்ட போதை ஆசாமிகள்...முடியாதுன்னு சொன்ன ஊழியர்கள்...!அடுத்து நடந்தது என்ன?

ஓசியில் பெட்ரோல் கேட்ட போதை ஆசாமிகள்...முடியாதுன்னு சொன்ன ஊழியர்கள்...!அடுத்து நடந்தது என்ன?
Published on: 
Updated on: 
1 min read

வந்தவாசி அருகே ஓசி பெட்ரோல் கேட்டு ஊழியா்களை போதை ஆசாமிகள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்துள்ள கீழ்கொடுங்காலூர் கிராம கூட்டுச்சாலை அருகே தனியாா் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் இங்கு மதுபோதையில் வந்த 5 போ் ஓசியில் பெட்ரோல் கேட்டுள்ளனா்.

அதற்கு ஊழியா்கள் மறுப்பு தொிவித்ததால் ஆத்திரத்தில் போதை ஆசாமிகள் மேலாளர் விநாயகம் மற்றும் ஊழியா்களை சரமாாியாக தாக்கிவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். ஆனால், அதில் ஒருவரை மட்டும் விரட்டி பிடித்த ஊழியர்கள் அவனை போலீசில் ஒப்படைத்துள்ளனா். பின்னர் இதுகுறித்த புகாாின்போில் விசாரணையை தொடங்கிய போலீசாா் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com