”மோர்பி விபத்தை அரசியலாக்க விரும்பவில்லை” ராகுல் காந்தி!!

”மோர்பி விபத்தை அரசியலாக்க விரும்பவில்லை” ராகுல் காந்தி!!
Published on
Updated on
1 min read

மோர்பி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களை கவனித்துக்கொள்ள மத்திய அரசு சிறப்பு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மத்திய அதிகாரிகள் மாநில அளவிலான அதிகாரிகள் வரை உத்தரவிடப்பட்டுள்ளது.

இரங்கல் தெரிவித்த ராகுல்:

இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். ”இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் நான் துணை நிற்கிறேன்” என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.

இந்த சம்பவத்தில் அரசியல் ரீதியாக எந்த கருத்தும் வெளியிடப் போவதில்லை என்றும், அவ்வாறு செய்வது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உணர்வுகளை புண்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்சி தொண்டர்களுக்கு அறிவுரை:

காங்கிரஸ் கட்சி அதன் தொண்டர்களிடம் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்தவரை உதவுமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த விஷயத்தின் முக்கியத்துவம் கருதி, இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.  

இந்த சம்பவத்தில் அரசியல் செய்வது இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலாகும் என்று கூறியுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com