மோர்பி செல்லும் பிரதமர் மோடி...விமர்சித்த காங்கிரஸ்..காரணம் என்ன?!!

மோர்பி செல்லும் பிரதமர் மோடி...விமர்சித்த காங்கிரஸ்..காரணம் என்ன?!!
Published on
Updated on
1 min read

குஜராத்தின் மோர்பி தொங்கும் பாலம் விபத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கு நாடு மற்றும் வெளிநாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மோர்பிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்ய உள்ளார். 

விமர்சித்த காங்கிரஸ்:

இன்று பிரதமர் மோடி மோர்பி தொங்கும் பாலம் விபத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க செல்கிறார்.  பிரதமர் வருகையினால் மருத்துவமனை முழுவதும் அவசரமாக சீரமைக்கப்பட்டு வருகிறது.  இதற்கு காங்கிரஸ் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. 

”மோர்பியில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி நாளை வருகை தருகிறார்.  அதற்கு முன், அங்கு சாயம் பூசும், வர்ணம் பூசும் பணி நடக்கிறது. மெருகூட்டப்பட்ட ஓடுகள் பதிக்கப்பட்டு வருகின்றன.

பிரதமர் மோடியின் படத்தில் எந்த குறையும் இருக்கக்கூடாது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

அவர்கள் வெட்கப்படவில்லை!  விபத்தால் பலர் இறந்துள்ளனர்.  ஆனால் அவர்களோ பிரதமரை வரவேற்கும் நிகழ்வில் ஈடுபட்டுள்ளனர்.” என காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com