பாரத் ஜோடோ யாத்ரா...19 வது நாள் நடைப்பயணத்தில் ராகுல்...!

பாரத் ஜோடோ யாத்ரா...19 வது நாள் நடைப்பயணத்தில் ராகுல்...!
Published on
Updated on
1 min read

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் தனது ஒற்றுமை பயணத்தின் 19-ம் நாள் நடைபயணத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார். 

பாரத் ஜோடோ யாத்ரா:

பாரத ஒற்றுமையை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத ஒற்றுமை பாத யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தற்போது திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை எர்ணாகுளம் மாவட்டங்கள் வழியாக காங்கிரஸ் தொண்டர்கள் புடைசூழ நடந்து வருகிறது. 

இன்று 19வது நாள்:

இதன் 19-ம் நாளான இன்று பாலக்காட்டின் ஷோரனூரில் தனது யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் அவருடன் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். சாலை எங்கும் அவருக்கு  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

மதங்களைக் கடந்து மனிதர்களை இணைக்கும் நோக்கமுடையது:

முன்னதாக, நேற்று திரிச்சூரில் உள்ள செருத்துருத்தி பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட அவர், பாஜகவினர் ஆங்கிலத்தை தடை செய்ய வேண்டும் என்று பரப்புரைகளை செய்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் பாரத்ஜோடோ என்ற ஒற்றுமைப் பயணம் மதங்களைக் கடந்து மனிதர்களை இணைக்கும் நோக்கமுடையது என்றும் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com