2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஒதுக்க திட்டம்... எதிர்க்கட்சி தலைவர் சொன்ன தகவல்!

2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஒதுக்க திட்டம்... எதிர்க்கட்சி தலைவர் சொன்ன தகவல்!
Published on
Updated on
1 min read

புதுச்சேரியில் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டிற்கு சுமார் 12 ஆயிரம் கோடி வரை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக  எதிர்கட்சி தலைவர் சிவா தகவல் தெரிவித்துள்ளார். 

மாநில திட்டக்குழு கூட்டம் :

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

பதில் அளிக்க மறுத்த ஆளும் கட்சியினர் :

இக்கூட்டத்தில் 2023 - 24 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்த துணை நிலை ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் என அனைவரும்  நிதி ஒதுக்கீடு தொடர்பாக எடுத்த முடிவுகள் குறித்து பதில் அளிக்க மறுத்த நிலையில், எதிர்கட்சி தலைவர் சிவா செய்தியாளர்களை சந்தித்தார்.

நிதி ஒதுக்கீடு :

அப்போது பேசிய அவர், 2023-24-ம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டிற்கு ரூ.11,600 கோடி நிதி  ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்வார் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com