திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் மஹுவா மொய்த்ரா அதானி குடும்பத்தினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதானி குடும்பத்திற்கும் செபி அதிகாரிகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும், அதனால் அனைத்தும் தன்னிச்சையாக நடந்ததாகவும் கூறியுள்ளார்.
குற்றச்சாட்டு:
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் ஏஜென்சி, பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி மீது பங்குக் கையாளுதல் மற்றும் கணக்கு முறைகேடுகள் என்று குற்றம் சாட்டியதை அடுத்து, அரசியலிலும் இது தீவிரமடைந்துள்ளது. பிரபல திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா, அதானி குடும்பத்தினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
அதானி-செபி தொடர்பு:
அதானி குடும்பத்துக்கும் செபி அதிகாரிகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும், அதனால் எல்லாம் தன்னிச்சையாக நடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். செபியின் கமிட்டியில் அதானியின் உறவினர்களும் பணிபுரிவதாகவும், அதன் காரணமாகவே இதுபோன்ற மோசடிகள் நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அதானியின் கூட்டாளிகள்:
பிரபல வழக்கறிஞர் சிரில் ஷ்ராஃப், அதானியின் கூட்டாளிகள், செபி கமிட்டியில் பணிபுரிவதாக மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார். சிரில் ஷ்ராப்பின் மகள் தொழிலதிபர் கவுதம் அதானியின் மகனுடன் திருமணம் செய்து கொண்டதாக மஹுவா கூறியுள்ளார். கார்ப்பரேட் கவர்னன்ஸ் மற்றும் இன்சைடர் டிரேடிங் தொடர்பான செபியின் கமிட்டியில் ஷெராஃப் பணியாற்றுகிறார் எனவும் அதானி வழக்கை செபி விசாரித்தால், ஷ்ராஃப் அதிலிருந்து விலக வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார் மொய்த்ரா.
-நப்பசலையார்