”எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்”மனகுமுறலை தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட நபர்!

”எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்”மனகுமுறலை தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட நபர்!
Published on
Updated on
1 min read

ஆன்லைன் லோன் எடுத்து பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த குட்டியானை டிரைவர் ஒருவர் "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" என்று பாடல் பாடி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

முன்னதாக, வங்கிகள் மக்களை கவரும் வகையில் ஆஃபர்களை கூறி அவர்களின் சூழ்நிலையை பயன்படுத்தி லோன்களை கொடுக்கின்றனர். பின்னர் லோன் வாங்கியவர்கள் வட்டி கட்ட தவறும் போது வங்கிகள் தங்கள் பணியாளர்களை வைத்து அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து பணத்தை வசூலிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். ஆனால் தற்போது, இதுபோன்ற சம்பவங்கள் ஆன்லைன் ஆப்கள் மூலம் அதிகமாகவே நிகழ்ந்து வருகிறது. 

ஆன்லைன் ஆப்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு லோன் கொடுத்துவிட்டு பின்னர், வாடிக்கையாளர்களை மிரட்டி அதிக பணம் வசூலித்து வருவது உள்பட பல மோசடிகள் அரங்கேறி பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பிறகு புகாரின் அடிப்படையில், போலீசார் பல மோசடி நிறுவனங்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. 

இந்நிலையில் ஆன்லைன் ஆப் மூலம் லோன் பெற்று வட்டி மேல் வட்டி கட்டி பாதிப்புக்கு உள்ளான சுமர் என்பவர், லோன் வாங்கியதால் தான் பெற்ற துன்பங்களை ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஆழ்வார்கோயில் பகுதியை சேர்ந்த குட்டியானை டிரைவரான ஏ.ஆர்.சுமர், ஆன்லைன் ஆப் மூலம் லோன் பெற்று வட்டி மேல் வட்டி கட்டி பாதிப்புக்கு உள்ளானதால் விரக்தியில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோவில், ”வட்டி எவ்வளவு போட்டாலும் கட்டலாம்னு உள்ளவங்க ஆன்லைன் லோன் எடுங்க அன்றாடம் கூலி வேலை செய்து குடும்பம் நடத்திறவங்க தயவு செய்து லோன் எடுக்காதீங்க” "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" என கூறியதோடு மட்டுமல்லாமல்,  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடல் பாடி  வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com