1950களில் கல்கி எழுதிய சிறப்பான படைப்பு தான் ‘பொன்னியின் செல்வன்’. மிக பிரம்மாண்டமான இந்த படைப்பை படமாக்க, பல பெரும் பிரபலங்கள் முயற்சி செய்த நிலையில், தற்போது, சுபாஸ்கரன் மற்றும் மணிரத்னம் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் வரும் செப்டம்பர் 30ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உலகெங்கும் வெளியாகிறது.
மேலும் படிக்க | அருண்மொழிவர்மன் எப்படி பொன்னியின் செல்வன் ஆனார் தெரியுமா?
இந்த நிலையில், படத்திற்கான பிரமோஷன் வேலைகள் படு பயங்கரமாக நடந்து வருகிறது. இன்று, பத்திரிக்கையாளர்களை சந்தித்த படத்தின் நடிகர்கள், படம் குறித்து ஆதர்வுகளை வழங்கக் கோரியும், படத்தின் முக்கியத்துவத்தையும் பற்றி பேசினர். அப்போது, நடிகர் கார்த்தியும் பேசினார்.
வானர அதாவது பானர் குல தூதுவன் வல்லவராயன் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கலக்க இருக்கும் கார்த்தி, இந்த படம் மூலம் தனக்குக் கிடைக்க போகும் பெருமையும் மகிழ்ச்சியும் குறித்து பேசும் போது, மாலைமுரசு பத்திரிக்கையாளர், அவரிடம் ஒரு கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க | வெளியானது 'ராட்சஸ மாமனே' பாடலின் லிரிக்கல் வீடியோ... !
மாலைமுரசு பத்திரிக்கையாளர்:
பொதுவாகவே, தஞ்சை பெரிய கோவில் சுற்றி ஒரு நம்பிக்கை இருக்கிறது. வெற்றி தேடி வாய்ப்பு தேடி அந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் எந்த தலைவர்களுக்கும் நல்லது நடக்காது என்றும், அவர்களுக்கு தீங்கே நடக்கும் என்றும் ஒரு ஐதீகம் போல உருவாகி இருக்கிறது. அதனால், தஞ்சை பெரிய கோவிலுக்கு, இது வரை எந்த தலைவர்களும், பிரபலங்களும் வந்தது இல்லை. ஆனால், சோழர்களின் வரலாற்றுக் காவியமாக உருவாகி இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ப்ரொமோஷனுக்காகவாவது அந்த கோவிலில் காலெடுத்து வைப்பீர்களா? இல்லை நீங்களும் அந்த கோவிலை தவிர்ப்பீர்களா?
கார்த்தி:
“அப்படியெல்லாம் இல்லை. அது போன்ற தவறான நம்பிக்கை எங்களிடம் இல்லை. நான் மட்டுமல்ல, என் படக்குழுவினரும் கண்டிப்பாக தஞ்சை பெரிய கோவில்லுக்கு போவோம். சாமி தரிசனம் செய்வோம்! ”
பின், படத்தை பார்த்தால், பல புரியும் பல புரியாது என படக்குழுவினர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
--- பூஜா ராமகிருஷ்ணன்