#1 ட்ரெண்டிங்!!! 5 மில்லியன் பார்வையாளர்கள் எட்டிய பிரம்மாண்ட படைப்பு!!!

பொன்னியின் செல்வன் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், பல லட்சப் பார்வையாளர்களை தமிழில் மட்டுமே தாண்டி, ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

#1 ட்ரெண்டிங்!!! 5 மில்லியன் பார்வையாளர்கள் எட்டிய பிரம்மாண்ட படைப்பு!!!

பிரபல எழுத்தாளர் கல்கியின் மிகவும் பிரம்மாண்ட படைப்பு தான் ‘பொன்னியின் செல்வன்’. ஆசியாவின் மிகப்பெரிய ரஜ்ஜியத்தை ஆண்ட ராஜ ராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனை மையமாக வைத்து 1950களில் உருவாக்கப்பட இந்த புனைப்பு கதையை திரையில் காண்பிக்க, பல பெரும் திரை பிரபலங்கள் காத்திருந்தனர். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தொடங்கி, கமல் வரை பலரும் முயற்சி செய்து வந்ததை நடத்திக் காட்டியவர் தான், மணிரத்னம். இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் திரையில் வரத் தயாராகி வருகிறது.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயராமின் கதாபாத்திரம் இது தானா...?

சுபாஸ்கரனின் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும், மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் நேற்று வெளியானது. விக்ரம், ஐஸ்வரியா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வரியா லக்‌ஷ்மி, சோபிதா துலிபாலா, பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், ரஹ்மான், சரத் குமார், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், கிஷோர் போன்ற மாபெரும் நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறது இந்த படத்தில்.

மேலும் படிக்க | பழுவேட்டரையர்களாக மிரட்ட வரும் சீனியர் நடிகர்கள்.. நாளுக்கு நாள் ஆர்வத்தை தூண்டும் பொன்னியின் செல்வன்..!

Ponniyin Selvan trailer: Mani Ratnam promises a grand historical spectacle  with Aishwarya Rai and Vikram | Entertainment News,The Indian Express

சுமார் 4 ஆண்டுகளாக உருவாகி வந்த இந்த படத்தின் முதல் பாகம், வருகிற செப்டம்பர் 30ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில், ஐ-மேக்ஸ் ஃபார்மேட்டில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், நேற்று வெளியான ட்ரெயிலர், ஐந்து மொழிகளிலும் மாபெரும் வரவேற்புப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க  |  காலமே காலமே... எழுந்து வா... பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் மரணம்..!

நேற்று இரவு 11 மணியளவில் வெளியான இந்த ட்ரெயிலர், வெளியான 15 மணி நேரத்திலேயே, தெலுங்கில், 1.3 மில்லியன், மலையாளத்தில், 5 லட்சம் பார்வையாளர்கள், கன்னடத்தில் 71 ஆயிரம் பார்வையாளர்கள் பெற்ற நிலையில், இந்தியில், 1.8 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இந்தியில் வெளியிடப்பட்டது, 5 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | ' வருகிறான் சோழன் ' பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா....?

Aishwarya lekshmi character poster ponniyin selvan revealed mani ratnam |  Galatta

இந்நிலையில், தமிழில் வெளியான இந்த ட்ரெயிலர், சுமார் 5 மில்லியன் பார்வையாளர்கள் பெற்று, இந்தியாவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு, அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கமலஹாசன் குரலில் ஒலிக்கும் இந்த ட்ரெயிலரில், தமிழர்களின் வாசம் நன்றாக வீசுகிறது. இந்தியில், அனில் கப்பூர், தெலுங்கில், ராணா டகுபட்டி, மலையாளத்தில் ப்ரித்விராஜ் மற்றும் கன்னடத்தில் ஜெயந்த் கைகீனி ஆகியோரின் குரலில் வெளியாகியுள்ள இந்த ட்ரெயிலரால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு, மக்களிடையே அதிகரித்துள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

மேலும் படிக்க | கனடாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரில் புதிய தெரு.. இனி 2 தெரு அவரது பெயரில்...!