கரூர் | வேலாயுதம்பாளையத்தில் புகழ்பெற்ற புகழிமலை என்று அழைக்கக் கூடிய ஆறு நாட்டார் மலை உள்ளது. மலையின் உச்சியில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு வருகின்ற 27ம் தேதி விமர்சையாக நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு இன்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. காவிரி ஆற்றில் தவுட்டுப்பாளையம் துறையிலிருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தம் எடுத்துக் கொண்டு தவிட்டுப்பாளையம், கரூர் - சேலம் புறவழிச்சாலை, பாலதுறை, வேலாயுதம்பாளையம் ரவுண்டானா வழியாக ஊர்வலமாக வந்தனர்.
ஊர்வலத்தின் முன்பகுதியில் மேள தாளங்கள் முழங்க யானை, குதிரை, ஒட்டகங்களுடன் சாமி வேடம் அணிந்த பெண்களின் நடனத்துடன் ஊர்வலமாக வந்தனர். மலையின் முன்புறம் பக்தர்களை வரிசையாக அனுப்பி தீர்த்தத்தை சேமித்து வைத்துக் கொண்டனர். இதனை காண சாலையின் இரு புறங்களிலும் ஏராளமானோர் பார்த்துச் சென்றனர்.
மேலும் படிக்க | பத்ரகாளியம்மன் கோயிலில் எருமை கிடாய் வெட்டி படையல்...